×

திருப்பத்தூர், ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் நடப்பு ஆண்டு கரும்பு அரவை தொடர வேண்டும் கலெக்டர் சிவனருளிடம் மனு

திருப்பத்தூர், நவ.20: திருப்பத்தூர், ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் நடப்பு ஆண்டுக்கான கரும்பு அரவையை தொடங்க வேண்டும், பணிநீக்கம் செய்யப்பட்ட பகுதி நேர தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க ேவண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் சிவனருளிடம் இந்திய கம்யூனிட்ஸ் கட்சி சார்பில் நேற்று மனு அளிக்கப்பட்டது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் திருப்பத்தூர் கலெக்டர் சிவன்அருளை நேற்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:திருப்பத்தூர் மாவட்டம், கேதாண்டப்பட்டி பகுதியில் கூட்டுறவு சர்க்கரை ஆலையும், ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியில் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையும் இயங்கி வருகிறது.இந்த 2 ஆலைகளிலும் கரும்பு வரத்து குறைந்ததால் நடப்பாண்டுக்கான கரும்பு அரவை நிறுத்தப்படுவதாகவும், ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு கரும்புகள் வேலூர் மற்றும் அரூர் பகுதியில் உள்ள ஆலைக்கு அனுப்பி வைக்க உள்ளதாக கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் தெரிவித்தது.மேலும், கரும்பு ஆலையில் பணியாற்றி வந்த பகுதி நேர தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டதால், 2 ஆலைகளிலும் பணியாற்றி வந்த பகுதி நேர தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் புதிய மாவட்டமாக உதயமாகும் நேரத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை நிறுத்துவது வேதனையளிக்கிறது. எனவே, திருப்பத்தூர் மற்றும் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை தொடர்ந்து செயல்பட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே, தொழிலாளர்களுக்கு உடனடியாக ஊதியத்தை வழங்க அரசு உத்தரவிட வேண்டும். 2 ஆலைகளில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த பகுதி நேர தொழிலாளர்களின் வேலை நீக்க உத்தரவை ரத்து செய்து தொடர்ந்து அவர்களுக்கு அங்கேயே வேலை வழங்கிட வேண்டும்.வரும் 28ம் தேதி திருப்பத்தூர் புதிய மாவட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள வரும் முதல்வர் பழனிசாமி இதற்கான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேண்டுகோள் விடுப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளது.கோரிக்கை மனுவை பெற்ற கலெக்டர் சிவன்அருள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார்.

Tags : Collector Sivanar ,Ambur Co-operative Sugar Mills ,Tirupattur ,
× RELATED தனியார் மருத்துவக்கல்லூரி கட்டணத்தை குறைக்க கோரிய மனு முடித்து வைப்பு