×

ஆலத்தூர் ஒன்றிய பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் மரக்கன்று பராமரிப்பு பணி ஆய்வு

பாடாலூர், நவ. 19: ஆலத்தூர் ஒன்றியம் நாரணமங்கலம் நர்சரி மற்றும் கொளக்காநத்தம் பகுதிகளில் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெறும் பணிகளை கலெக்டர் சாந்தா ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் நாரணமங்கலம் மற்றும் கொளக்காநத்தம் ஆகிய பகுதிகளில் வளர்ச்சித்துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் மரக்கன்றுகள் வளர்ப்பு பணிகளை கலெக்டர் சாந்தா ஆய்வு செய்தார்.அப்போது ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் நாரணமங்கலத்தில் ரூ.22 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள நர்சரியில் சரக்கொன்றை, ஆத்திமரம், மறல்கொன்றை, காட்டுவாகை, நாட்டுதேக்கு, குமிழ்தேக்கு, கருங்கொன்றை மற்றும் வேம்பு என 1 லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு ஏரி மற்றும் குளக்கரைகளில் நடப்பட்டு வருகிறது. அவ்வாறு கொளக்காநத்தம் பகுதியில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளையும், அங்கு அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து கலெக்டர் சாந்தா ஆய்வு மேற்கொண்டார்.மாவட்ட திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) தெய்வநாயகி, உதவி இயக்குனர் (ஊராட்சி) மகாலிங்கம், ஒன்றிய பொறியாளர் ராஜபாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆலயமணி, லட்சுமி உடனிருந்தனர்.

Tags : area ,Alathur Union ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...