×

தகுதியான அனைவருக்கும் நலத்திட்டங்கள் விரைந்து சென்றடைய பணியாற்ற வேண்டும்

பெரம்பலூர்,நவ.19: பெரம்பலூரில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 253 மனுக்களை மக்களிடமிருந்து ெபற்று ெகாண்ட கலெக்டர் சாந்தா தகுதியான அனைவருக்கும் நலத்திட்டங்கள் விரைந்து சென்றடைய பணியாற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்்தரவிட்டார். திங்கட் கிழமைதோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் கலெக்டர் சாந்தா தலைமையில் நேற்று (18ம்தேதி) நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 253 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.
பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்ட கலெக்டர் சாந்தா சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்க ளின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

அதனைத்தொடர்ந்து சர்வதேச பேரிடர் மேலாண்மை குறைப்பு தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை குறைப்பு தின விழிப்புணர்வு தொடர்பான பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற 29 மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் சாந்தா பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சக்திவேல், மாவட்ட ஆதிதிராவிடர் நலஅலுவலர் மஞ்சுளா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பெரம்பலூரில் செயல்படும் லால்குடி...