×

விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தேன்கனிக்கோட்டை, நவ.19: தேன்கனிக்கோட்டையில், விவசாயிகளுக்கு பட்டா வழங்கக் கோரியும், பால் விலையை உயர்த்தக் கோரியும்,  தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் சிக்கண்ணா தலைமை தாங்கினார். தளி ஒன்றிய தலைவர் கணேசரெட்டி, அஞ்செட்டி ஒன்றிய தலைவர் ராமன், மாவட்ட செயலாளர் சந்திரசேகர், மாநில துணை தலைவர் சம்புலிங்காகவுடா, மாவட்ட மகளிர் அணி தலைவி கிரிஜம்மா, துணை தலைவி யசோதா, தளி ஒன்றிய செயலாளர் ஈரேகவுடா, கெலமங்கலம் ஒன்றிய தலைவர் உமாபாரதி, ஓசூர் ஒன்றிய தலைவர் நாராயணா, சூளகிரி ஒன்றிய தலைவர் வெங்கடேஷ், சம்பங்கிராமைய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் ஸ்ரீராமரெட்டி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.  வெளிநாட்டிலிருந்து பால்பொருட்கள் இறக்குமதி செய்வதை கைவிடவேண்டும், பசும்பாலுக்கு ₹40ம், எருமை பாலுக்கு ₹50 என விலை உயர்த்தி வழங்க வேண்டும். தாலுகா அலுவலகத்தில் பட்டா வழங்குதில் உள்ள முறைகேடுகளை தடுத்து, விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்து கோஷங்களை எழுப்பினர். பின்னர், தாசில்தாரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Tags : Farmers' Union ,demonstration ,
× RELATED டெல்லியில் நடைபெறும் போராட்டத்துக்கு...