×

அரசு குடியிருப்புகள் பராமரிப்பின்றி சேதம்

தர்மபுரி, நவ.19: தர்மபுரி அருகே ஒட்டப்பட்டியில் உள்ள அரசு குடியிருப்பு வீடுகள் பராமரிப்பு இன்றி சேதமடைந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஓசூர் பிரிவு சார்பில், தர்மபுரி ஒட்டப்பட்டியில் அரசு ஊழியர்களுக்காக ஏ,பி,சி டைப்களில் வாடகைக்கு 90 வீடுகள் அடுக்கு மாடி வீடுகளாக கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகளில் பெரும்பாலான வீடுகள் சேதம் அடைந்து வருகிறது. சேதம் அடைந்த வீடுகளை மராமத்து செய்ய வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக 20க்கும் மேற்பட்ட வீடுகள் பராமரிப்பு இன்றி சேதம் அடைந்து வருகிறது.  இது குறித்து ஒட்டப்பகுதி அரசு குடியிருப்பு பகுதி பொதுமக்கள் கூறுகையில், ஒட்டப்பட்டி அரசு குடியிருப்பு பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுமே, பழமையான வீடுகள் தான். இந்த வீடுகளில் பிரிட்ஜ், வாசிங் மிஷின் போன்ற மின் சாதனங்கள் பயன்படுத்த முடியாது. இங்கு வாரியம் இணைத்துள்ள மின் வயர் மெலிதானதாகும். எனவே எங்களது வீடுகளுக்கு அதிக கனம் கொண்ட மின் வயர்களை இணைத்துள்ளோம்.

கதவு, ஜன்னல் பழுது குறித்து அலுவலகத்தில் புகார் செய்தாலும், எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் தரமில்லாத பொருட்களை பயன்படுத்தி கட்டியதாக கூறப்பட்டதால், அந்த வீடுகளில் யாரும் குடியேரவில்லை. இதையடுத்து அந்த வீடுகள் அனைத்தும் சேதம் அடைந்து வருகிறது. எனவே பழைய வீடுகளுக்கு, பதிலாக புதிய வீடுகளை கட்டி வாடகைக்கு விட, வீட்டு வசதி வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா