×

குறைதீர் கூட்டத்தில் இலவசமாக மனு எழுதி கொடுக்க ஏற்பாடு பொதுமக்கள் மகிழ்ச்சி

மதுரை, நவ. 19: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் இலவசமாக மனு எழுதி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.  மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் முகாம் நடந்தது. கலெக்டர் வினய் தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 400க்கு மேற்பட்டோர் மனு கொடுத்தனர்.

இதுவரை குறைதீர் நாள் முகாமிற்கு வரும் பொதுமக்கள் தங்களது குறைதீர் தொடர்பான மனுக்களை கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே பணம் கொடுத்து எழுதி வாங்கி வந்தனர். இதனை தவிர்க்க கலெக்டர், நேருயுவகேந்திரா அமைப்பு சார்பில் இலவச மனு எழுத ஏற்பாடு செய்திருந்தார். அதன்படி நேற்று மக்கள் குறைதீர் அரங்கத்திற்கு முன்பு பொதுமக்களுக்கு கோரிக்கை மனுக்களை நேருயுவகேந்திர அமைப்பை சேர்ந்த 5 பேர் இலவசமாக எழுதி கொடுத்தனர். இந்த அமைப்பை சேர்ந்த மேலும் 5 பேர் குறைதீர் கூட்ட வளாகத்தில் பொதுமக்களுக்கு மனு எழுதி கொடுத்தனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags : public ,house ,
× RELATED பொதுமக்கள் தேவையின்றி வெளியே...