×

அக்மார்க் முத்திரை, உரிமம் பெற்றுதான் நெய் உள்பட 35 ெபாருட்கள் தயாரிப்பு : ஆவின் நிர்வாகம் விளக்கம்

சென்னை: ஆவின் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: ஆவின் நெய் உட்பட 35 பொருட்களில் அக்மார்க் முத்திரை பயன்படுத்த தடை என்ற தலைப்பில் சில பத்திரிகையில் செய்தி வெளி வந்துள்ளது. இது தொடர்பாக ஆவின் நிறுவனம் தன்னிலை விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது: ஆவின் நெய்க்கு (35 நிறுவனங்களின் பொருட்கள் உள்ளிட்ட) வழங்கப்பட்டு இருந்த அக்மார்க் முத்திரை அனுமதி காலம் மார்ச் 31ல் காலாவதியாகி விட்டது. இந்த அனுமதியை புதுப்பிக்க நிறுவனங்கள் விண்ணப்பிக்கவில்லை. இதையடுத்து நிறுவனங்கள் தங்கள் உணவுப் பொருட்கள் விற்பனையில் அக்மார்க் முத்திரை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று செய்தி வெளிவந்துள்ளது. ஆவின் நிறுவனம் தமிழகத்தில் நுகர்வோர்களுக்கு தரமான பால் மற்றும் பால் பொருட்களை வழங்கி, சேவை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் ஒவ்வொன்றும் உரிமம் பெற்றுதான் செயல்பட்டு வருகிறது.

பால் மற்றும் பால் உற்பத்திப் பிரிவு அம்மாபாளையம், செங்கம் தாலுகா, திருவண்ணாமலை மாவட்டம் உள்ள பிரிவு என்ற எண்ணில் அக்மார்க் முத்திரை நெய்க்கு வாங்கப்பட்டு செயல்பட்டு வந்தது. இந்த உரிமம் 2019 மார்ச் 31ம் தேதி அன்று முடியவுள்ள நிலையில் உரிய முன் அனுமதிக்காக மனு செய்த பின் மே 31 அன்று அக்மார்க் உரிமம் பெற்று செயல்பட்டு வருகிறது. இந்த உரிமம் காலாவதியாகும் நாள் 2024 மார்ச் 31ம் தேதி.
எனவே பத்திரிகைகளில் தவறான செய்தி வெளியிட்டது போல் உரிமம் இல்லாமல் ஆவின் நிறுவனம் தயாரிக்கவில்லை என்று தெரிவிப்பதுடன் நுகர்வோர்களிடையே ஆவின் நிறுவனத்தை பற்றிய அதிருப்தி ஏற்படும் வகையில் தவறான செய்தியை வெளியிட வேண்டாம் என்று ஆவின் நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது.

Tags :
× RELATED ஆம்பூர் ஸ்டார் பிரியாணி கடையின் வணிக...