×

ராயக்கோட்டை அருகேமினி வேன் கவிழ்ந்து 13 பேர் படுகாயம்

ஓசூர், நவ. 14: ராயக்கோட்டை அருகே, மினி வேன் கவிழ்ந்து கார்மெண்ட்ஸ் தொழிலாளிகள் 13 பேர் காயமடைந்தனர்.  ஓசூர் அடுத்த ராயக்கோட்டை, வெள்ளிச்சந்தை, தேவசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பெங்களூரில் உள்ள தனியார் கார்மென்ட்ஸ் கம்பெனியில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கம்பெனி மூலம் மினிவேனில் தினமும் அழைத்து செல்லப்படுவர். இதே போல் நேற்று காலை வழக்கம்போல் ராயக்கோட்டை, வெள்ளிச்சந்தை, தேவசமுத்திரம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த தொழிலாளர்களை அழைத்துக்கொண்டு மினிவேன் சென்று கொண்டிருந்தது.

அப்போது தேவசமுத்திரம் அருகே சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் இருந்த வெள்ளிசந்தையை பகுதியை சேர்ந்த  கன்னியப்பன், முருகேசன் (43), சொக்கநாதன், (38) உள்ளிட்ட 13 பேர்  படுகாயமடைந்தனர். இவர்களை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 9 பேர் ஓசூர் அரசு மருத்துவமனையிலும், 5 பேருக்கு கிருஷ்ணகிரி  அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ராயக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : van crashes ,Royakkotta ,
× RELATED கொரோனா பாதித்த ஐபிஎல் வீரர்கள் 2 பேர்...