×

புளியங்குடியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

புளியங்குடி, நவ. 14: புளியங்குடி காயிதேமில்லத் மேல்நிலைப்பள்ளி மற்றும் நியூ கிரசண்ட் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி சார்பில் மழைநீர் சேகரிப்பு மற்றும் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது மேலப்பள்ளிவாசல் திடலில் நடந்த பேரணி துவக்க நிகழ்ச்சிக்கு ஜமாஅத் கமிட்டித்தலைவரும் காயிதேமில்லத் பள்ளி செயலாளருமான முகம்மது இஸ்மாயில் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை சபுர் பாத்திமா, நியூ கிரசண்ட் பள்ளி முதல்வர் பாலசுப்பிரமணியம், முகைதீன் ஆண்டவர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தங்கமாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் செய்யது சுலைமான் வரவேற்றார். ஆசிரியர் முப்பிடாதி டெங்கு விழிப்புணர்வு பற்றி பேசினார்.
நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு ) சுரேஷ், டெங்கு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். காயிதேமில்லத் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் அப்துல் ஹமீது, காதர் மைதீன், உதுமான், நியூ கிரசண்ட் பள்ளி ஆசிரியர் ராஜேந்திரன், கற்பகராஜ், முருகேசன் ஆகியோர் பேரணியை ஒழுங்குபடுத்தினர்.

பேரணியில் முஸ்லிம் லீக் மாவட்ட துணை செயலாளர் அப்துல் வகாப் , நகர பொருளாளர் முகம்மது சுலைமான், முஸ்லிம் மாணவர் பேரவை மைதீன்பிச்சை, சாகுல்ஹமீது, புளியங்குடி முஸ்லிம் அறக்கட்டளை செயலாளர் காஜா நஜ்முத்தீன், பொருளாளர் முகம்மது கனி, உறுப்பினர் பீர்முகம்மது, ஜமாஅத் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் காதர்மைதீன், முக்கடி சேக்முகைதீன், மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மழைநீர் சேமிப்பின் அவசியம், டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியபடி மாணவர்கள் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். பேரணி மேலப்பள்ளிவாசல் திடலிலி முடிவடைந்தது.

Tags : Rain water harvesting campaign ,Puliyankudi ,
× RELATED கொரோனா தாக்கம் எதிரொலி;...