×

தா.பழூர் பகுதி விவசாயிகள் கண்டுணர்வு அனுபவ சுற்றுலா

தா.பழூர், நவ. 13:தா.பழூர் ஒன்றியத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின்கீழ் அறுவடைக்குப்பின் விளைப்பொருட்களின் நிர்வாகம் மற்றும் விளைப்பொருட்களை மதிப்பு கூட்டுதல் தலைப்பில் அரியலூர் மாவட்ட காய்கறி விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு விவசாயிகளை கண்டுணர்வு சுற்றுலாவாக அழைத்து செல்லப்பட்டனர். உற்பத்தியாளர் நிறுவன நிர்வாக இயக்குனர் ராஜகோபால் பேசும்போது, அரியலூர் மாவட்ட காய்கறி விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் 300 பங்குதாரர்களை கொண்டு துவங்கப்பட்டது. தற்போது 450 பங்குதாரர்களை கொண்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது என்றார். மேலும் நிறுவனத்தின் செயல்பாடு குறித்து விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.மேலும் இங்கு விவசாய விளைப்பொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்தும்போது எங்களுக்கு விளைப்பொருட்களை நேரடியாக விற்கும் விலையின் லாபத்தை விட பன்மடங்கு லாபம் கிடைக்கிறது என்றார். இதைதொடர்ந்து நிறுவனத்தில் இயங்கி வரும் மதிப்புக்கூட்டுதல், இயந்திரங்களின் செயல்பாடு குறித்து விரிவாக எடுத்து கூறினார். நிகழ்ச்சியில் அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் சகாதேவன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.


Tags : Palur Area Farmers Experience Tour ,
× RELATED பெரம்பலூரில் செயல்படும் லால்குடி...