×

திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் அன்னாபிஷேக பூஜை

திருப்புத்தூர், நவ. 13:  திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் நடந்த அன்னாபிஷேக பூஜையில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருப்புத்தூரில் உள்ளது அருள்மிகு சிவகாமி உடனாய திருத்தளிநாதர் சுவாமி, யோக பைரவர் கோயில். இங்கு நேற்று ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக பூஜை நடைபெற்றது. முன்னதாக  காலை 11 மணியளவில்  திருத்தளிநாதாருக்கு பால், சந்தனம், மஞ்சள், தயிர், பன்னீர் உள்ளிட்ட  16 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.  தொடர்ந்து சொர்ணாபிஷேகம் நடந்தது. பின்னர் மூலவர் அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாரானைகள் நடைபெற்றன.   தொடர்ந்து கோயிலில் இருந்து அன்னத்தை சிவாச்சாரியார்கள் எடுத்து கொண்டு மேளதாளத்துடன் கோயிலின் சீதளி குளத்திற்கு பக்தர்களுடன் வந்தனர். அங்கு படிக்கட்டில் அன்னத்தை வைத்து சிறப்பு தீபாராதனை நடத்தினர், தொடர்ந்து அன்னத்துடன் சேர்த்து புடலைங்காய், வெண்டக்காய், கத்தரிக்காய், பீன்ஸ், கேரட் உள்ளிட்ட காய்கறிகளுடன் பூக்களையும் சேர்த்து தண்ணீரில் கரைத்து விடப்பட்டன. இதனையடுத்து பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்த அன்னத்தை பக்தர்கள் எடுத்து குளத்தில் கரைத்தனர். பின்னர் மூலவர் விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து திருத்தளிநாதருக்கு சிறப்பு தீபாராதனைகள், அர்ச்சனைகள் நடைபெற்றன. பூஜைகளை ரமேஷ், ஸ்ரீதர் குருக்கள் செய்தனர். இதில் ஏராளமான பக¢தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Anupisheka Pooja ,Tirupputhur Thirupalinathar Temple ,
× RELATED திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் சம்பக சஷ்டி விழா நாளை தொடக்கம்