×

மூணாறு-உடுமலை சாலையில் பாலம் உடைந்ததால் புதிய பாதை திறப்பு

மூணாறு, நவ.12: மூணாறில் மூணாறு-உடுமலை பகுதிகளை இணைக்கும் பெரியவாரை தற்காலிக பாலம் உடைந்ததால் கே.டி.ஹச்.பி நிறுவனத்திற்கு சொந்தமான பாதை நேற்று வாகன போக்குவரத்திற்காக திறந்து கொடுக்கப்பட்டது. மூணாறு-உடுமலை பகுதிகளை இணைக்கும் முக்கிய பாலமான பெரியவாரை பாலம் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழை காரணமாக பாலம் உடைந்தது. பின்னர் போக்குவரத்திற்காக தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலமும் 3 முறை உடைந்ததையடுத்து, இறுதியாக ஜெர்மன் தொழில்நுட்பத்தில் பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்நிலையில் நவ.9ம் தேதி பாலம் மீண்டும் உடைந்து போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள 8 எஸ்டேட் தொழிலாளர்கள் பெரிதும் பதிப்படைந்தனர். இந்நிலையில் கே,டி.ஹச்.பி நிறுவனத்திற்கு சொந்தமான பாதையை  தற்காலிகமாக திறந்து கொடுக்க வலியுறுத்தி தேவிகுளம் துணை ஆட்சியர் பிரேம் கிருஷ்ணன் தலைமையில் நிறுவன அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது அதன் பலனாக நேற்று காலை  முதல்

தற்காலிக பாதை தோட்டத் தொழிலாளி மற்றும் பயணிகளுக்குகாக திறக்கப்பட்டது. தற்காலிக பாதை வழியாக சிறிய ரக வாகனங்கள் மட்டும் பெரியவாரை பகுதியில் இருந்து புதுகாடு வழியாக மூணாறு வந்தடையலாம். மேலும் புதிய பாலத்தின் பணிகள் நிறைவடைந்து இன்று பொதுமக்களுக்காக திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன் மூலம் 8 எஸ்டேட் பகுதியில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தேவிகுளம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் புதிய பாலம் அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.

Tags : road ,break ,Munnar-Udumalai ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி