×

காரைக்குடி அருகே ஆடுகள் சாவு; விஷ நெல் காரணமா?

காரைக்குடி, நவ.12:  காரைக்குடி அருகே விஷம் வைத்து 5 ஆடுகள் கொல்லப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. காரைக்குடி அருகே புக்குடி பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் தனது வீட்டில் சொந்தமாக ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை தனது வீட்டில் இருந்த 5 ஆடுகளும் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. கால்நடை மருத்துவர் பரிசோதனை செய்து  சிகிச்சை அளித்தார். நேற்று காலை பார்த்தபோது ஆடுகள் அனைத்தும் இறந்துகிடந்தன. இதுகுறித்து அவர் கூறுகையில், தோட்டத்தில் மேய போனபோது அரிசியில் யூரியாவை கலந்து வைத்துள்ளனர். அதனை சாப்பிட்ட ஆடுகள் இறந்துள்ளன. இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளேன் என்றார்.

Tags : Karaikudi ,
× RELATED ஆடு திருடிய இருவர்கள் கைது