×

நல்லம்பள்ளி அரசு பள்ளியில் மழைநீர் தேக்கத்தால் தொற்று ேநாய் அபாயம்

நல்லம்பள்ளி, நவ.12: நல்லம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் தேங்கியுள்ள மழைநீரால், தொற்று ேநாய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நல்லம்பள்ளி அருகே நார்த்தம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக, பள்ளி வளாகத்தை சுற்றிலும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. ேமலும் கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்து, காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழைநீரை அகற்ற கோரி அதிகாரிகளிடம் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மாணவர்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு, தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும், மழைநீர் தேங்காமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Nallampalli ,government school ,
× RELATED நல்லாம்பள்ளி கிராமத்தில் சுகாதார வளாகத்தை பராமரிக்க கோரிக்கை