நல்லம்பள்ளி அருகே தரைமட்ட பாலம் அமைக்க வலியுறுத்தல்

நல்லம்பள்ளி, நவ.12:நல்லம்பள்ளி அருகே சாலையில் செல்லும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, தரை மட்ட பாலம் அமைக்க ேவண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், நல்லம்பள்ளி அருகே சனிசந்தை பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இப்பகுதியில் வழியும் தண்ணீர், சனிசந்தைக்கு செல்லும் சாலை வழியாக தாதநாயக்கம்பட்டி ஏரிக்கு தொடர்ந்து செல்கிறது. சந்தைக்கு செல்லும் சாலைகளில் தார் சாலை அமைப்பதற்கான பணிகள் நடந்து வந்த நிலையில், தண்ணீர் வரத்தினால் சாலையில் இருந்த மண் அடித்து செல்லப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். தண்ணீர் அதிகமாக செல்லும் நாட்களில் வாகன ஓட்டிகள் இந்த இடத்தை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, சந்தைக்கு செல்லும் சாலையில் தரைமட்ட பாலம் அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : ground level bridge ,Nallampalli ,
× RELATED பட்டாபிராம் பகுதியில் வீடுகளை...