×

பயன்பாட்டிற்கு வராத சேவை மையம்

கடத்தூர், நவ.12:  கடத்தல் அருகே புட்டிரெட்டிப்பட்டியில் 5 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத சேவை மையத்தை திறக்க ேவண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  கடத்தூர் அருகே புட்டிரெட்டிப்பட்டியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், குடியிருப்பு, சாதி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெற, 30கி.மீ தொலைவில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்திற்கு சென்று வந்தனர். இதனால் ஏற்படும் பணம் மற்றும் கால விரயத்தை தவிர்க்க, கடத்தூர் பகுதியில் கிராம சேவை மையம் அமைக்க ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் ேபரில், கடந்த 2013-14ம் ஆண்டு ₹13.20 லட்சம் மதிப்பீட்டில், புட்டிரெட்டிப்பட்டியில் ஊராட்சி மன்ற ேசவை மையம் கட்டப்பட்டது. ஆனால், பணிகள் முடிந்து 5 ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராமல் காட்சி பொருளாகவே உள்ளது. இதனால், பல்வேறு சான்றிதழ்கள் பெறுவதற்கு மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, ஊராட்சி மன்ற சேவை மையத்தை, உடனடியாக பயன்பாட்டிற்கு திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Service Center ,
× RELATED மூடியே கிடக்கும் கிராம ஊராட்சி இ-சேவை மையம்