பென்னாகரம் அருகே ஏரியில் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

தர்மபுரி, நவ.12: பென்னாகரம் அருகே அனுமந்தராயன் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றகோரி, கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். பென்னாகரம் அருகே எர்ரகொல்லனூர் கிராமத்தை சேர்ந்த முரளி மற்றும் ஊர் பொதுமக்கள், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் ேநற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு, மனு கொடுத்தனர். அந்த மனுவில், பென்னாகரம்- முதுகம்பட்டி செல்லும் வழியில் உள்ள அனுமந்தராயன் ஏரியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.  இந்த ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, பென்னாகரம் தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டும். எர்ரகொல்லனூர் கிராமத்திற்கு அடிப்படை வசதிகளான தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய் அமைத்து தரவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : removal ,lake ,Pennagaram ,
× RELATED ஊட்டி நகரில் குதிரைகள் தொல்லை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை