×

பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா

தர்மபுரி, நவ.12: தர்மபுரி மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்களில், சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில், 1500க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வாகனங்கள் உள்ளன. மாணவ, மாணவிகள் பாதுகாப்பை கண்காணிக்கும் வகையில், அனைத்து பள்ளி வாகனங்களிலும், சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. அதன்படி, அனைத்து பள்ளி வாகனங்களிலும் சிசிடிவி கேமரா, ஜிபிஎஸ் கருவிகள் உடனடியாக பொருத்த வேண்டும் என தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் கேட்டுக்கொண்டார்.  இதுதொடர்பாக தர்மபுரி, பாலக்கோடு, அரூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி முதல்வர்கள், மேலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆலோசனைகள் வழங்கினார். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் கூறுகையில், ‘மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பள்ளி வாகனங்களில், முன்பக்க கண்ணாடி, பின்பக்க கண்ணாடியின் அருகே சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். எப்சி மற்றும் ஆய்வுக்கு வரும் வாகனங்கள், கண்டிப்பாக சிசிடிவி கேமரா பொருத்திய நிலையில் தான் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வரவேண்டும்,’ என்றார்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா