×

விஏஓவை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டிய விவசாயி கைது

மயிலாடுதுறை, நவ. 12: மயிலாடுதுறை அருகே விஏஓவை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டல் விடுத்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே குத்தாலம் போலீஸ் சரகம் தொழுதாலங்குடியை சேர்ந்தவர் மணிகண்டன்கமலநாதன். இவர் மூவலூர் விஏஓவாக பணியாற்றி வருகிறார். நேற்றுமுன்தினம் விஏஓ அலுவலகத்தில் பணியில் இருந்தபோது, மூவலூரை சேர்ந்த திருநாவுக்கரசு (44) என்பவர், எனது நிலத்திற்கான பயிர் காப்பீட்டுத்தொகை யாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டுள்ளார்.திருநாவுக்கரசு நிலத்தை தனியாரிடம் அடகு வைத்துள்ளார். அதனால் நிலம் அடகு பிடித்தவருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக விஏஓ தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயி , விஏஓ வை தரக்குறைவாக பேசி பணிசெய்ய விடாமல் தடுத்துள்ளார்.இது குறித்து கொடுத்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விவசாயி திருநாவுக்கரசை கைது செய்தனர்.


Tags :
× RELATED பழநியில் இடப்பிரச்னையில்...