×

திருவள்ளுவர் சிலைக்கு காவி சாயம் பூசி அவமதிப்பு திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி, நவ. 12: திருவள்ளுவர் சிலைக்கு காவி சாயம் பூசியதை கண்டித்தும், சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், திருச்சியில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் முத்தழகன், வடக்கு மாவட்ட செயலாளர் நீலவாணன், மாநில நிர்வாகிகள் தங்கதுரை, தமிழ்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கீல் சதீஷ் வரவேற்றார்.இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலர் உஞ்சை அரசன், வர்த்தக அணி மாநில துணை செயலாளர் ராஜா, அச்சு ஊடக மைய துணை செயலாளர் ரமேஷ்குமார், மாநில தொழிலாளர் விடுதலை முன்னணி செயலாளர் பிரபாகரன், இளஞ்சிறுத்தை திருச்சி பாசறை மாநில செயலாளர் அரசு, வக்கீல் மாநில அணி துணை செயலாளர் சுப்பிரமணி, கிழக்கு தொகுதி செயலாளர் கனியமுதன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். முடிவில் மாநகர் மாவட்ட துணை செயலாளர் புல்லட் ராஜா நன்றி கூறினார்.இதில் திருவள்ளுவருக்கு காவி பூசியதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் சந்தனமொழி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Liberation Panthers ,Tiruchi ,
× RELATED திருச்சி மாவட்டத்தில் காதலித்து...