×

போலீசார் அதிரடி சோதனையில் 329 மதுபாட்டில்கள் பறிமுதல் மூன்று பேர் கைது

மேலூர், அக்.23: கீழவளவு போலீசார் மது விற்றவரை கைது செய்து 239 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.மேலூர் அருகில் உள்ள தனியாமங்கலத்தை சேர்ந்தவர் ஜெகதீசன்(46). கீழவளவு போலீசார் ரோந்து சென்ற போது இவர் மது விற்பதை பார்த்து கைது செய்தனர். ஜெகதீசனிடமிருந்து 239 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோல் பேரையூர் பகுதியில் போதை பொருட்கள் தடுப்பது சம்மந்தமாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பேரையூர் முக்கு டி.கல்லுப்பட்டி சாலையில் வன்னிவேலம்பட்டி விலக்கு அருகே வன்னிவேலம்பட்டியை சேர்ந்த காளியப்பன்(40) டூவீலரில் அனுமதியின்றி விற்பனைக்கு கொண்டு சென்றபோது போலீசார் அவரை கைது செய்து, 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் பேரையூர் முக்குச்சாலையில் வன்னிவேலம்பட்டியை சேர்ந்த முத்துக்கண்ணன்(50) வைத்திருந்த சாக்குபையில் சோதனை செய்தபோது, அவரிடமிருந்து 50 மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்து முத்துக்கண்ணனை பேரையூர் போலீசார் கைது செய்தனர்.

Tags : liquor shops ,
× RELATED மதுரையில் அத்தியாவசிய பொருட்களை...