×

விபத்தில்லா தீபாவளி கொண்டாட மாணவர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி

மேலூர், அக். 23: விபத்தில்லா தீபாவளி கொண்டா பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்பு துறையினர் தீ விபத்து தடுப்பு பயிற்சி அளித்தனர்.மேலூர் அருகில் உள்ள கம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடுவது, பட்டாசுகள் வெடிக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் தீ விபத்து தடுப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு செயலாக்க பயிற்சி தீயணைப்பு துறை சார்பில் கொடுக்கப்பட்டது. கொட்டாம்பட்டி நிலைய அலுவலர் தயாளக்குமார் தலைமையில் 7 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் இதனை செய்து காண்பித்தனர். இத்துடன் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர்(பொ) பிச்சை முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.மேலும் தீயணைப்பு வீரர் விஜயராஜ், கோவில்பட்டி கிருஷ்ணன், கம்பூர் சிவா மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை கம்பூர் ஊராட்சி இளைஞர் குழுவினர் செய்திருந்தனர்.

Tags : Fire Prevention Training for Students Celebrating Accident Diwali ,
× RELATED டி.கல்லுப்பட்டி காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு சென்ற வாலிபர் மரணம்