×

அரசு பாலிடெக்னிக்கில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

பாலக்கோடு, அக்.23: பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இக்கல்லூரி ஆரம்பித்த 1985-1988ம் ஆண்டின் ேபாது, முதலாம் ஆண்டு படித்த மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. துணை முதல்வர் ரவி விழாவை தொடங்கி வைத்தார். இதில், ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது. விழாவின் நினைவாக நூறு மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டது. இதில், கல்லூரிக்குத்தேவையான ஆழ்துளை கிணறு மற்றும் நீர்த்தேக்க தொட்டி, நூலகம், நுழைவாயிற்கதவு அமைத்து கொடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Tags : Alumni Meeting ,
× RELATED வேலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில்...