×

பென்னாகரம் அரசு பள்ளி என்எஸ்எஸ் மாணவர்கள் தூய்மை பணி


பென்னாகரம், அக்.23:  பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.  பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பில், பென்னாகரம் பேரூராட்சிக்குட்பட்ட போடூர் 4 ரோடு பகுதியில் இருந்து போடூர் போயர் காலனி வரையில், சாலையின் இரு ஓரத்தில் இருந்த பார்த்தீனிய செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் வேளாண் பிரிவு மாணவர்கள், பென்னாகரம் பேரூராட்சி பணியாளர்களோடு இணைந்து, தூய்மை பணியில் ஈடுபட்டனர். இதில், பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர். இந்த தூய்மை பணியில் பேரூராட்சி அலுவலர் பெருமாள், வேளாண் பிரிவு ஆசிரியர் கிருஷ்ணன், நாட்டு நலப்பணித்திட்ட ஆசிரியர் செந்தில்குமார், உதவி தலைமை ஆசிரியர் லில்லி, தேசிய மாணவர் படை ஆசிரியர் பைரோஸ் பாஷா, ஆசிரியர்கள் விஜயகுமார், கஞ்சபழனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Pennagaram Government School NSS ,
× RELATED பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மும்பை...