×

தனியார் ஸ்பின்னிங் மில்லை மூடியதால் தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு

தர்மபுரி, அக்.23: தர்மபுரி மாவட்டம் பாகல்பட்டியில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் பணியாற்றும் தொழிலாளர்கள் நேற்று தர்மபுரி கலெக்டர் மலர்விழியிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகாவிற்குட்பட்ட பாகல்பட்டியில் இயங்கி வரும் ஸ்பின்னிங் மில்லில், அந்த பகுதியை சேர்ந்த 300 தொழிலாளர்கள், கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் 22ம் தேதி (நேற்று) காலை 10 மணிக்கு போலீசாருடன் வந்த அதிகாரிகள், கடன் பிரச்னை காரணமாக ஸ்பின்னிங் மில்லில் பணியாற்றிய தொழிலாளர்களை வெளியேற்றிவிட்டு, மில்லை பூட்டி சீல் வைத்துவிட்டனர். இந்த நடவடிக்கை குறித்து எந்த முன்அறிவிப்பும் செய்யாமல் மில்லை பூட்டியதால், 300 குடும்பத்தினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தகவல் தெரிவித்திருந்தால் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தியிருப்போம். எனவே 30 தொழிலாளர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் உதவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : closing ,Collector ,spinning mill ,
× RELATED ஈரோட்டில் விதிகளை மீறி இயங்கிய 15 சாய...