×

உலக கை கழுவும் தின கருத்தரங்கம், செயல்விளக்கம்

திருத்துறைபூண்டி, அக்.18: திருத்துறைப்பூண்டி ரோட்டரி கிளப் சார்பில் ஆலத்தம்பாடி ஜானகி அண்ணி அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக கை கழுவும் தின கருத்தரங்கம் மற்றும் செயல் விளக்கம் நடைபெற்றது. ரோட்டரி சங்கத்தலைவர் சற்குணநாதன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர்கள் மற்றும் முத்துசாமி, பொருளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் குமணன் வரவேற்றார்.என்எஸ்எஸ்திட்ட அலுவலர் கண்ணதாசன் கை கழுவுவது குறித்து செயல்விளக்கம் செய்து காட்டினார். ரோட்டரி சங்கத்தின் சார்பாக பள்ளி மாணவர்கள் 600 பேருக்கு உலக கை கழுவும் தினம் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம், சோப்பு மற்றும் டவல் வழங்கப்பட்டன. ரோட்டரி சங்க செயலர் நாகலிங்கம் நன்றி கூறினார்.

Tags : World Hand Wash Day Seminar ,Demonstration ,
× RELATED அரசு நிலத்தை மீட்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்