×

வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை கொள்ளை

மொடக்குறிச்சி, அக்.18: ஈரோடு அடுத்த முள்ளாம்பரப்பு, முல்லை நகரை சேர்ந்தவர் இருசப்பன் (40). இவர், சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். இவரது மனைவி காயத்ரி (36). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இருசப்பன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு லாரியில் லோடு ஏற்றிக்கொண்டு கொல்கத்தா சென்றுவிட்டார். அவரது மனைவி காயத்ரி கடந்த 15ம் தேதி ஈரோடு மோசிக்கீரனார் வீதியிலுள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு மற்றும் கிரில்கேட் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 16 பவுன் தங்க நகைகள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து காயத்ரி அளித்த புகாரின்பேரில் ஈரோடு தாலுகா போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED வேலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2.5 கிலோ தங்கம் கொள்ளை