×

பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி

ஈரோடு, அக்.18: ஈரோடு திருநகர் காலனியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி முருகேஸ்வரி (55). மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து கடைக்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, வைராபாளையம் பம்பிங் ஸ்டேசன் ரோட்டில் சென்ற போது இவரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த வாலிபர் ஒருவர், முருகேஸ்வரி அணிந்திருந்த 3 பவுன் செயினை பறிக்க முயன்றார். ஆனால், முருகேஸ்வரி செயினை கெட்டியாக பிடித்துக்கொண்டு கூச்சல் போட்டார். இதனால், செயினை பறிக்க முடியாமல் வழிப்பறி வாலிபர் தப்பி சென்றார்.

Tags :
× RELATED பெண்ணிடம் கவரிங் நகை பறிப்பு