×

அரியலூரில் அறிவியல் கண்காட்சி

அரியலூர், அக். 17: அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் ஒருங்கிணைந்த பள்ளி, கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடந்தது. கண்காட்சியை துவக்கி வைத்து கலெக்டர் ரத்னா பேசியதாவது: மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் பள்ளி அளவிலும், கல்வி மாவட்ட அளவிலும் அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது. இக்கண்காட்சியானது 5 பிரிவுகளாக நடத்தப்பட்டது. மேலும் அறிவியல் கண்காட்சியுடன் அறிவியல் பெருவிழா, கணித கருத்தரங்கம் மற்றும் ஆசிரியர் கண்காட்சி நடத்தப்பட்டது. வீட்டுக்கு ஒரு விஞ்ஞானியை உருவாக்கிடும் விதத்தில் இக்கண்காட்சியின் படைப்புகள் சிறப்பாக இருந்தது.

கண்காட்சியில் 19 அரங்குகளில் ஆரோக்கியம், சுகாதாரம், ஆற்றல் வளங்கள் மேலாண்மை, உணவு பாதுகாப்பு, நீர் வளங்களை பாதுகாத்தல், மறுசுழற்சி, கழிவு மேலாண்மை, போக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட தலைப்புகளில் 161 பள்ளிகளில் இருந்து 321 படைப்புகள் இடம் பெற்றிருந்தன என்றார். இதைதொடர்ந்து கண்காட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த மூன்று படைப்புகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. எஸ்பி னிவாசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் முன்னிலை வகித்தனர். கல்வி மாவட்ட அலுவலர்கள் அரியலூர் செல்வராஜ், உடையார்பாளையம் செல்வராசு, செந்துறை மணிமொழி, பள்ளி துணை ஆய்வாளர் பழனிசாமி மற்றும் தலைமை ஆசிரியர், மாணவர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர்.

Tags : Science Exhibition ,Ariyalur ,
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்...