உலக முதியோர் தினவிழா

வாடிப்பட்டி, அக். 10: வாடிப்பட்டி அருகே சொக்கலிங்கபுரம் கிராமத்தில் உள்ள முதியோர் கருணை இல்லத்தில் உலக முதியோர் தினம் கொண்டாடப்பட்டது. ஹெல்ப்பேஜ் இந்தியா தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த இவ்விழாவில் கச்சைகட்டி ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன், நோய் தாக்கங்களிலிருந்து முதியோர் பாதுகாப்பு பற்றி பேசினார். கிரட் தொண்டு நிறுவன நிர்வாகி அழகேசன் முதியோர் உதவித்தொகை பெறுவது குறித்து விளக்கி பேசினார். ஹெல்ப்பேஜ் இந்தியா தொண்டு நிறுவன அலுவலர் கர்ணன் நன்றி கூறினார்.

Tags : World Elderly Day Festival ,
× RELATED போலீசாரை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியல்