×

குன்றத்து கோயிலில் உண்டியல் வசூல் ரூ.15 லட்சம்

திருப்பரங்குன்றம், அக். 10: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் காணிக்கை மாதம் ஒருமுறை எண்ணப்படுவது வழக்கம். இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. செப்.6ம் தேதி முதல் அக்.8ம் தேதி வரை பக்தர்கள் வழங்கிய உண்டியல் காணிக்கைகள் கோயில் துணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) ராமசாமி, அழகர்கோவில் துணை ஆணையர் அனிதா, கண்காணிப்பாளர் (பொறுப்பு) கோகுலகண்ணன், அலுவலர்கள் மணிமாறன், நெடுஞ்செழியன், புகழேந்தி ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில் ரொக்கமாக ரூ.15 லட்சத்து 416ம், தங்கம் 110 கிராமும், வெள்ளி 1 கிலோ 200 கிராமும் கிடைத்தன. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள், மாணவர்கள் ஈடுபட்டனர்.

Tags : Kundattu temple ,
× RELATED சென்னை செங்குன்றம் அருகே பழைய...