தாலுகா அலுவலகம் முன் விஏஓக்கள் ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு, அக்.10: திருச்செங்கோடு தாலுகா அலுவலகம் முன்பு, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிராம நிர்வாக அலுவலர்களுக்கான கலந்தாய்வு நடத்தாததை கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்றாத மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரை  கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட தலைவர் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் நந்தகுமார் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். வட்ட செயலாளர் குணசேகரன் நன்றி கூறினார். பெண்கள் உள்பட கிராம நிர்வாக அலுவலர்கள் திரளாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து  கொண்டனர்.

Tags : taluk office ,
× RELATED காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் விஏஓக்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்