×

புட்டிரெட்டிப்பட்டியில் பயன்பாடின்றி பூட்டியே கிடக்கும் சுகாதார வளாகம்

கடத்தூர், அக்.10: கடத்தூர் அருகே புட்டிரெட்டிப்பட்டியில் பயன்பாடின்றி பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடத்தூர் அருகே புட்டிரெட்டிப்பட்டியில் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகளில், தனிநபர் கழிப்பிட வசதி இல்லை.இதனால் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த 2011-2012ம் ஆண்டு ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் முறையாக பராமரிக்காததால், தண்ணீர் வசதி இல்லாமல் சுகாதார வளாகம் கடந்த ஓராண்டாக மூடியே உள்ளது. எனவே, சுகாதார வளாகத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு, மீண்டும் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Putrettipatti ,
× RELATED நாடாளுமன்ற வளாக அலுவலகத்தில்...