முன்விரோத தகராறு வாலிபரை தாக்கியவர் கைது

ஜெயங்கொண்டம், அக். 10: ஜெயங்கொண்டம் அருகே முன்விரோத தகராறில் வாலிபரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார். ஜெயங்கொண்டம் அருகே உள்ள துளாரங்குறிச்சியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் விஜயகுமார் (25). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் தங்கசாமி மகன் சக்திவேல் (27) என்பவருக்கும் முன்விரோத தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் இருவருக்கும் இடப்பிரச்னை சம்மந்தமாக முன்விரோத தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது சக்திவேல் ஆத்திரமடைந்து விஜயகுமாரை தாக்கினார். இதுகுறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் விஜயகுமார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து சக்திவேலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED முதியவரை தாக்கியவர் கைது