×

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஒப்படைக்க வியாபாரிகளுக்கு வேண்டுகோள்

பெரம்பலூர், அக்.10: தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்தால், அவற்றை பொதுமக்கள் உடனடியாக நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஒப் படைக்காத கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்ற நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து பெரம்பலூர் நகராட்சி ஆணையர் (பொ) ராதா வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் தெரிவித்தி ருப்பதாவது: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களான பாலித்தீன் பை, தெர்மா கோல் தட்டு, பிளாஸ்டிக் தட்டுகள், குவளைகள், தண்ணீா் பாக்கெட், உறிஞ்சி குழாய், பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்ட பொருட்கள் வைத்திருந்தால் உடனடியாக, பிளாஸ்டிக் ஒழிப்புக்காக வரும் வாகனத்திலோ, நகராட்சி அலுவலகத்தி லோ ஒப்படைக்க வேண்டும்.பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்க மேற்கொண்டுள்ள அரசின் முயற்சிக்கு, பெரம்பலூர் நகராட்சி பொதுமக்களும், வணிகா–்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : traders ,
× RELATED நீடாமங்கலத்தில் மேம்பாலப்பணியை...