ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளுக்கு சமையலர் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

பெரம்பலூர்,அக்.10: பெரம்பலூர் மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிக ளுக்கு 28 சமையலர் பணி யிடங்கள் 15,700 முதல் 50 ஆயிரம் என்ற ஊதிய பிணைப்பில், ரூபாய் 15,700 ஊதியத்தில் பணியிடங் கள் பூர்த்தி செய்வதற்கு தகுதியான நபர்களிடமி ருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இதற்கான விண்ணப்ப தாரர், தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

சமையலர் பணியிடத் திற்கு அனுபவம் உள்ளவர் களுக்கு முன்னுரிமை தரப் படும். 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்க ளாக இருக்கவேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும். இந்தப் பணி யிடங்களுக்கு தகுதியான நபர்கள் பெரம்பலூர் மாவ ட்டம், பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழ ங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை ப்பெற்று, நேரடியாகவோ அஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடர் மற் றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு வருகிற 18ம் தேதிக்குள் விண்ணப் பித்திட வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : Invite applicants ,
× RELATED காஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி...