×

மின்சாரம் பாய்ந்து ஓய்வு ஆசிரியர் பலி

திருமங்கலம், செப். 20: திருமங்கலம் அருகே உள்ள கிழவனேரியைச் சேர்ந்த நமச்சிவாயம் (62). ஓய்வு பெற்ற ஆசிரியர். மனைவி பாண்டியம்மாள். இவர்களுக்கு கிழவனேரியில் தோட்டமும், திருமங்கலத்தில் வீடும் உள்ளது. தினசரி கணவன், மனைவி இருவரும் தோட்டத்திற்கு வந்து, அங்குள்ள சாகுபடி மற்றும் மாடுகளை பார்த்துச் செல்வர். இந்நிலையில், நேற்று கணவன், மனைவி இருவரும் தோட்டத்திற்கு வந்தனர். அங்குள்ள மாடு, கன்றுகளை பார்த்துவிட்டு முதலில் மனைவியை திருமங்கலத்தில் உள்ள வீட்டிற்கு நமச்சிவாயம் அனுப்பினார். பின்னர், தோட்டத்து வீட்டில் உள்ள அறையில் பல்பு ஒன்று எரியாமல் இருந்துள்ளது. அதனை கழற்ற முயன்றபோது நமச்சிவாயம் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தார். திருமங்கலம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : rest teacher ,
× RELATED இலவச மின்சார திட்டம் தொடரும்;...