×

அரசு பஸ் மோதி இளம்பெண் பலி

வாடிப்பட்டி, செப். 20: சமயநல்லூர் அருகே, பரவை பட்டத்தரசி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சந்திரசேகரன் மனைவி அங்கயற்கண்ணி (25), பூ வியாபாரி. நேற்று மாலை பரவை பெட்ரோல் பங்க் அருகே, சாலையை கடக்க முயன்றார். அப்போது ஈரோட்டிலிருந்து மதுரை வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அங்கயற்கண்ணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சமயநல்லூர் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்

Tags : teenager ,
× RELATED சொந்த ஊர் செல்வதற்காக ஆந்திராவில் அரசு பேருந்தை கடத்தி சென்ற இளைஞர் கைது!!