×

வட்ட அளவிலான தடகள போட்டியில் காமராஜர் பள்ளி சாதனை

சேந்தமங்கலம், செப்.20: சேந்தமங்கலம் வட்ட அளவிலான தடகள போட்டியில், காமராஜர் பள்ளி மாணவ மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
சேந்தமங்கலத்தில் வட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் பொம்மைகுட்டைமேடு காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் அதிக பதக்கம் வென்று சாதனை படைத்தனர். 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் ராகுல்நம்பி 100மீ, 200மீ, நீளம் தாண்டுதல் ஆகிய மூன்று போட்டியிலும் முதலிடம் பிடித்து, தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார்.    பெண்களுக்கான 19 வயதுக்குட்பட்ட பிரிவில், மாணவி ஆர்த்தி 100மீ, 200மீ ஓட்ட போட்டியில் முதலிடமும், நீளம் தாண்டுதலில் இரண்டாம் இடமும் பெற்று தனி நபர் சாம்பியன் பட்டம் வென்றார். இப்பள்ளி மாணவர்கள் 63 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர்.
மேலும், நீளம் தாண்டுதல், கோலூன்றி தாண்டுதல், தடை தாண்டும் ஓட்டம் ஆகியவற்றில் முதலிடமும், குண்டு எறிதல், ஈட்டி எறிதலில் இரண்டாமிடமும் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், பயிற்சி அளித்த உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கும், கல்வி நிறுவன தலைவர் நல்லதம்பி, செயலாளர் சதாசிவம், தலைமையாசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Tags : Round-Athletic Competition ,
× RELATED வட்ட அளவிலான தடகள போட்டியில் அரசு பள்ளி சாதனை