×

வட்ட அளவிலான தடகள போட்டியில் அரசு பள்ளி சாதனை

சேந்தமங்கலம், செப்.19: வட்ட அளவிலான தடகள போட்டியில் எருமப்பட்டி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாதனை படைத்துள்ளது.நாமக்கலில் வட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மூத்தோர் பிரிவில் நீளம் தாண்டுதலில் 2 தங்கப்பக்கம், ஒரு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளனர். மேலும், ஓட்டப்பந்தயத்தில் 2 வெள்ளிப்பதக்கமும், தொடர் ஓட்டத்தில் ஒரு வெள்ளிப்பதக்கமும் பெற்று சாதனை படைத்தனர். சரக அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினர். மேலும் 10வது மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில், முதல் 3 இடங்களை மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Round-Athletic Competition ,
× RELATED வட்ட அளவிலான தடகள போட்டியில் காமராஜர் பள்ளி சாதனை