×

விவேகானந்தா கல்லூரியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்

திருச்செங்கோடு, செப்.20: திருச்செங்கோடு எளையாம்பாளையம் விவேகானந்தா கல்விக் குழுமத்தின் ஓர் அங்கமான ரபீந்திரநாத் தாகூர் மகளிர் கல்வியியல் கல்லூரி மற்றும் விஸ்வபாரதி  கல்வியியல் கல்லூரி சார்பாக, டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு பற்றிய விழிப்புணார்வு முகாம் நடந்தது.
     முகாம் துவக்க விழாவில்,   ரபீந்திரநாத் தாகூர் மகளிர் கல்வியியல் கல்லூரி முதல்வர்  பரிமளா வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக அரசு மருத்துவமனை மருத்துவர்கள்  அமுதராணி,  மோகன்ராஜ் முருகேசன் ஆகியோர் பங்கேற்று, பயிற்சி ஆசிரிய மாணவிகளுக்கு டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பரவும் முறைகள், அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி எடுத்துக் கூறினர். மேலும், குறும்படம்  மூலம் மாதிரி செயல்முறை வாயிலாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
 அதை தொடர்ந்து, விஸ்வபாரதி கல்வியியல் கல்லூரி முதல்வர்  ஆரோக்கியசாமி, வட்டார சுகாதார அலுவலர்கள்  பஞ்சாட்சரம், லோகநாதன், கார்த்திக்குமார், வெங்கடாசலம்
ஆகியோர் கலந்து கொண்டனர்.  கல்லூரி பயிற்சி ஆசிரிய மாணவிகள் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பற்றிய கலைநிகழ்ச்சியினை நடத்தினர்.  இந்நிகழ்ச்சியில்  டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் உதவி பேராசிரியைகள்  கோகிலா காயத்ரி, பொன்னுசாமி  பங்கேற்றனர்.

Tags : Dengue Prevention Awareness Camp ,Vivekananda College ,
× RELATED விவேகானந்தா கல்லூரியில் கைவினை பொருட்கள் தயாரிப்பு பயிற்சி முகாம்