×

நொய்யல் ஆற்றில் அதிகரிக்கும் சமூக விரோத செயல்கள்

திருப்பூர்,செப்.20: திருப்பூர் மணியகாரம்பாளையம் ரோட்டில் உள்ள நொய்யல் ஆற்றில் புதர் மண்டி கிடப்பதால் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கோவையில் துவங்கும்நொய்யல் ஆறு, பேரூர் இருகூர், மங்கலம், திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளின் வழியாக சென்று காவிரியில் கலக்கிறது. இந்நிலையில் திருப்பூர் போன்ற பின்னலாடை தொழில்கள் அதிகம் நடைபெறும் இடங்களில் வழியாக நொய்யல் பயணிக்கும் போது அங்குள்ள சாய, சலவை ஆலைகளின் சாய கழிவு நீரை நொய்யலில் திறந்து விடுகின்றனர். இதனால் நொய்யல் ஆறு மிகவும் மாசடைந்த ஆறுகளின் ஒன்றாக உள்ளது.

மேலும் நொய்யல் ஆற்றை தூர்வாராமல் பல கிலோமீட்டர் தொலைவுக்கு கருவேலமரங்கள் அடர்த்தியாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் நொய்யல் ஆறு செல்லும் பாதைகள் எங்கும் சீமை கருவேல மரங்கள் முளைத்துள்ளதால் அதற்குள் சென்று பலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக திருப்பூர் ராக்கியாபாளையத்திலிருந்து மணியகாரம்பாளையம் செல்லும் ரோட்டிலுள்ள நொய்யலில் ஆற்றை சுற்றிலும் சீமை கருவேலமரங்கள் முளைத்துள்ளது. இதனால் இந்த அடர்ந்த பகுதிக்குள் புகுந்து இரவு நேரங்களில், மது,கஞ்சா விற்பனை செய்துவது, விபச்சாரம் உள்ளிட்ட அனைத்து சமூக விரோத செயல்களும் நடைபெறுகிறது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: இப்பகுதியில் இரவு நேரங்களில் தெருவிளக்குகள் இல்லாததால், சமூகவிரோதிகள் ஆற்றுக்குள் இருக்கும் சீமை கருவேலமரங்கள் உள்ள பகுதியில் மறைந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும், இரவு நேரங்களில் இந்த ரோடு வழியாக செல்லும் பொதுமக்களிடம் வழிப்பறியும் செய்கின்றனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிகையும் இல்லை. எனவே இப்பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றை தூர்வாரி சமூக விரோத செயல்களில் ஈடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்கள்.

Tags : Noel River ,
× RELATED 20 ஆண்டுகளாக நொய்யல் ஆற்றை கடக்க பரிசல் பயணம்: பாலம் அமைக்க கோரிக்கை