×

10 தாலுகாவில் இன்று சிறப்பு குறைதீர் முகாம்

ஈரோடு, செப். 20: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாவில் இன்று (20ம் தேதி) அம்மா திட்டம் மற்றும் சிறப்பு குறைதீர் கூட்ட முகாம்
நடக்கிறது. அதன்படி, ஈரோடு தாலுகா பகுதிகளில் நஞ்சை தளவாய்பாளையம் விஏஓ அலுவலகத்திலும், பெருந்துறை தாலுகாவில் புதுப்பாளையம் விஏஓ அலுவலகத்திலும், மொடக்குறிச்சி தாலுகாவில் பூந்துறை சேமூர் விஏஓ அலுவலகத்திலும், கொடுமுடி தாலுகாவில் சிவகிரி விஏஓ அலுவலகத்திலும் நடக்கிறது.

பவானி தாலுகாவில் ஒலகடம் பேரூராட்சி மன்ற அலுவலகத்திலும், சத்தி தாலுகாவில் கடம்பூர் விஏஓ அலுவலகத்திலும், கோபி தாலுகாவில் செய்யாம்பாளையம் விஏஓ அலுவலகத்திலும் முகாம் நடக்கிறது. அந்தியூர் தாலுகாவில் மைக்கேல்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், தாளவாடி தாலுகாவில் மல்லன்குழி குருபரகூண்டி சமுதாய கூடத்திலும், நம்பியூர் தாலுகாவில் குருமந்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் நடக்கிறது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags : Taliban Camp ,Taluk ,
× RELATED தமிழகத்தில் பொதுப்போக்குவரத்துக்கு...