×

கலெக்டர் அலுவலக வளாகத்தில் தூய்மை பணி துவக்கம்

பெரம்பலூர்,செப்.20: பெரம் பலூரில் பிரதமர் மோடி யின் “தூய்மையே சேவை” இயக்கத்தின் சார்பாக கலெக்டர் அலுவலகத்தை சுற்றிலும் மேற்கொள்ளப் படும் தூய்மைப் பணிக ளைக் கலெக்டர் சாந்தா குப்பைகளை அள்ளி தொட ங்கி வைத்தார்.பெரம்பலூரில் பிரதமர் மோடியின் “தூய்மையே சேவை” இயக்கத்தின் சார்பில் கலெக்டர் அலுவலகத்தை சுற்றிலும் தூய்மை செய்யும் பணிகள் நேற்று துவங்கியது. பெரம்பலூர் நகராட்சி துப்புரவு பணியாளர்களை கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த தூய்மை பணிகளை மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத்துறை கூடுதல் செயலாளர் ராஜேஸ்வரி, துணை செயலாளர் சாகு முன்னிலையில் கலெக்டர் சாந்தா துவக்கி வைத்தார். அப்போது கலெக்டர் அலுவலக பின்புறமுள்ள புதர் பகுதிகளில் குப்பைகளை, மக்காத பிளாஸ்டிக் பைகளை அள்ளி குப்பை தொட்டியில் போட்டார். இதைதொடர்ந்து பெரம்பலூர் நகராட்சியின் 50க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் கைகளில் துடைப்பத்துடன் வந்து தூய்மை பணிகளை மேற்கொண்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், தூய்மை இந்தியா திட்டத்துக்கான மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜபூபதி, நகராட்சி உதவி பொறியாளர் மனோகர், பணி மேற்பார்வையாளர் குமரன், துப்புரவு ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம், கணேசன் உடனிருந்தனர்.


Tags : Commencement ,office premises ,Collector ,
× RELATED ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ...