×

அன்னை தெரசா கல்வி நிறுவனத்தில் ஓசோன் தின கருத்தரங்கம்

ஜெயங்கொண்டம் ,செப்.20: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அன்னை தெரசா கல்வி நிறுவனங்களில் உலக ஓசோன் தினம் கருத்தரங்கம் நடைபெற்றது.பிரபஞ்ச தெய்வீக பேராற்றல் பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் முத்துகுமரன் தலைமை வகித்து மாணவர்களிடையே பேசுகையில், ஓசோன் படலத்தில் சூரியனிலிருந்து வெளியேறும் புற ஊதாக்கதிர்களில் இருந்து மனிதன், விலங்கு, தாவரங்கள் என பூமிப்பந்தில் தஞ்சம் புகுந்துள்ள அனைவரையும் பாதுகாப்பதற்காக பிரபஞ்சம் ஏற்படுத்தியுள்ள படலம்தான் ஓசோன் படலம். இவற்றை பாதுகாக்க அதிக அளவில் மரங்களை வளர்க்கவேண்டும். ஒவ்வொரு மனிதருக்கும் ஈடாக வெறும் 28 மரங்கள் மட்டும் உலகில் உள்ளது. ஓசோன் படலத்தில் தீங்கு விளைவிக்காத வகையில் பேட்டரி வாகனங்கள் ஏசி பிரிட்ஜ் தயாரிக்க உலக நாடுகள் முன்வர வேண்டும்  என்றார். முன்னதாக பள்ளி முதல்வர் தனலட்சுமி வரவேற்றார். இறுதியில் அன்னை தெரசா நர்சிங் கல்லூரி தாளாளர் உஷா முத்துக்குமரன் நன்றி கூறினார்.

ஜெயங்கொண்டம், தா.பழூர், உடையார்பாளையம், தழுதாழைமேடு ஆகிய துணை மின் நிலையங்களில் பகுதிகள் ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், உட்கோட்டை, வாரியங்காவல், உடையார்பாளையம், இரும்புலிக்குறிச்சி, பரணம், சோழங்குறிச்சி, இடையார், தா.மேலூர், தா.பொட்டக்கொலை, துளாரங்குறிச்சி, தா.பழூர், சிலால், வாணாதிராயன்பட்டினம், இருகையூர், கோடாலிகருப்பூர், உதயநத்தம், அனைகுடம், சோழமாதேவி, தென்கட்சிபெருமாள்நத்தம், நாயகனைபிரியாள், பொற்பதிந்தநல்லூர், இடங்கன்னி, கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி, காரைக்குறிச்சி, ஆயுதக்களம், கங்கைகொண்டசோழபுரம், பிள்ளையார்பாளையம், வீரசோழபுரம்.அரியலூர் துணை மின் நிலைய பகுதிகள்: அரியலூர் ஒரு சில பகுதி, கயர்லாபாத், வாலாஜாநகரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், வாரணவாசி, அஸ்தினாபுரம், குறிச்சிநத்தம், புதுப்பாளையம், சிறுவளுர், ஜெமீன் ஆத்தூர், ரசுலாபாத், பாளம்பாடி, பார்ப்பனச்சேரி, தவுத்தாய்குளம், மல்லூர், கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், மண்ணுழி, ராஜீவ்நகர் மற்றும் கொளப்பாடி, மணக்குடி, கடுகூர், கோப்பிலியன்குடிகாடு, சீனிவாசபுரம், பொய்யாதநல்லூர், ஒட்டக்கோயில், கோவிந்தபுரம், மங்களம், தாமரைக்குளம், குறுமஞ்சாவடி.Tags : Ozone Day Seminar ,Mother Teresa Institute ,
× RELATED பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில்...