×

தண்டவாளத்தில் வாலிபர் சடலம் மீட்பு

தர்மபுரி, செப்.19: கடத்தூர் அருகே ரயில் தண்டவாளத்தில் வாலிபர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே மணியம்பாடி பகுதியை சேர்ந்தவர்  சின்னசாமி. இவரது மகன் சங்கர்(30).  இவர் கடத்தூர் அருகே மொரப்பூர்ஊத்தங்கரை இடையே உள்ள  ரயில்வே தண்டவாளத்தில் நேற்று முன்தினம் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அவ்வழியாக சென்றவர்கள், ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.  அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற ரயில்வே போலீசார், சங்கரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சங்கர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Plaintiff ,corpse recovery ,
× RELATED கலெக்டர் அலுவலக வளாகத்தில் டிரைவர் சடலம் மீட்பு