பெரியார் பல்கலை மையத்தில் இலக்கிய மன்ற சொற்பொழிவு

தர்மபுரி, செப்.17: தர்மபுரி பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையத்தில், ஆங்கில துறையின் இலக்கிய மன்ற சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மைய இயக்குனர் (பொ) மோகனசுந்தரம் தலைமை வகித்தார். முதலாமாண்டு மாணவி ரக்ஷியா வரவேற்றார். வேலூர் விஐடி பல்கலைக்கழக இணை பேராசிரியர் புவனேஸ்வரி கலந்து கொண்டு ஆய்வு கட்டுரைகள் எழுதுவது குறித்து பேசினார். ஆங்கிலத்தறை இணை பேராசிரியரும், துறைத் தலைவருமான கோவிந்தராஜ், மாணவர் வரதராஜ், உதவி பேராசிரியர்கள் கிருத்திகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாணவி சிவசக்தி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை மாணவர்கள் அபினேஷ்குமார், வித்யா, பாலாஜி மற்றும் கீர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Lecture ,Periyar University ,
× RELATED இலக்கிய மன்ற துவக்க விழா