அரசு போக்குவரத்து பணிமனையில் தரைமட்ட தண்ணீர் தொட்டியில் சடலமாக கிடந்த பெண் ஊழியர்

நல்லம்பள்ளி, செப்.15: தர்மபுரி மாவட்டம், அரூர்  தெட்டாம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் அதியமான்கோட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணி புரிந்து வந்தார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால், வாரிசு அடிப்படைகளில் அவரது மனைவி மலர்(52), போக்குவரத்து கழக பணிமனையில் அலுவலக உதவியாளராக பணி புரிந்து வந்தார். இவரது மகன், மகளுக்கு திருமணமாகி விட்டது. இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில், பணிமனையில் உள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டி அருகே, மலரின் காலணிகள் கிடந்துள்ளது. இதைப்பார்த்த சக ஊழியர்கள், அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

 பின்னர், தண்ணீர் தொட்டிக்குள் பார்த்த போது, அதில் மலர் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்த தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதியமான்கோட்டை போலீசார், மலரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என விசாரித்து வருகின்றனர்.

Tags : state water workshop ,
× RELATED தவறி விழுந்து பெண் பலி