×

மொரப்பூரில் நெல் நடவு பணிகள் தீவிரம்

அரூர், செப்.15: மொரப்பூர் பகுதியில் தைப்பட்டத்திற்கான நெல் நடவு பணிகளை விவசாயிகள் துவக்கி உள்ளனர். அரூர்  சுற்றுவட்டார பகுதியில், அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது.  இதையடுத்து கீரைப்பட்டி, வீரப்பநாயக்கன்பட்டி, அக்ரஹாரம், மோபிரிப்பட்டி   மற்றும் மொரப்பூர், கம்பைநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் நெல்  பயிரிடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக வயலை தயார்  படுத்தி, நாற்றாங்கால் விடுதல் உள்ளிட்ட பணிகளில்  ஈடுபட்டுள்ளனர். இந்த பயிர் தைப்பட்டத்தில் அறுவடைக்கு வரும் என  விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED மொரப்பூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும்