×

டிஜிபி உத்தரவு எதிரொலி ஓட்டல்கள், விடுதிகள் தொடர் கண்காணிப்பு

புதுச்சேரி, செப். 15:  புதுவையில் டிஜிபி உத்தரவுக்கிணங்க ஓட்டல்கள், விடுதிகளில் போலீசார் தொடர் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.  புதுவையில் ஓட்டல்கள், விடுதிகளில் சீனியர் எஸ்பி அகன்ஷா யாதவ் தலைமையில் அதிரடி சோதனை நடத்திய சிறப்பு அதிரடிப்படை விபசாரத்தில் தள்ளப்பட்ட 9 அழகிகளை மீட்டது. ஓட்டல் மேலாளர், புரோக்கர்கள், சென்னை இளம்பெண் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட 9 அழகிகளும் அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சோதனைகளும் முடிக்கப்பட்ட நிலையில் நாளை மறுநாள் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளனர். அதன்பிறகு அவர்கள் அனைவரும் நகர பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு போலீசார் மூலம் பெற்றோர், உறவினர்கள் வரவழைக்கப்பட்டு ஒப்படைக்கப்பட உள்ளனர்.இதனிடையே வார இறுதி நாட்களில் ஓட்டல்கள், விடுதிகள், மசாஜ் சென்டர்கள் தொடர்ந்து ரகசியமாக கண்காணிக்க போலீசாருக்கு, காவல்துறை தலைமை அதிரடியாக உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன.

Tags : hotels ,
× RELATED பல ஆயிரம் ஓட்டல்கள் மூடல்: வியாபாரிகள் தவிப்பு